முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் இலங்கை சிறையில் அடைப்பு

சனிக்கிழமை, 7 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

ராமேஸ்வரம், ஜன. - 7 - இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் இலங்கை மன்னார் சிறையில் அடைக்கப்பட்டனர்.  ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 2 ம் தேதி போஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கோவிந்தராஜ், நாதன், குமார், ஆறுமுகம் ஆகியோர் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகில் எந்திர கோளாறு ஏற்பட்டது. பின்னர் மீனவர்கள் படகை அங்கே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி உள்ளனர். இதன் பின்னர் கடந்த 4 ம் தேதி காணாமல் போன படகை தேடி ஜெயபால் என்பவருக்கு சொந்தமான படகில் மீட்பு குழுவினர் நடுக்கடலுக்கு தேடி சென்றனர். அப்போது பழுதான படகை இலங்கை கடற்படையினர் பிடித்து இலங்கை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இந்த நிலையில் மீனவர்கள் 4 பேர் மீதும் எல்லை தாண்டி வந்ததாக தலைமன்னார் போலீசார் வழக்குப் பதிவு செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்கள் 4 பேரையும் சிறைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதால் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என்று இந்திய - இலங்கை நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு பிரதிநிதி அருளானந்தம் தெரிவித்தார். இதற்கிடையில் கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரத்தில் சகாயம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மார்சிலின், கார்மேகம், முனியசாமி, அலெக்சாண்டர் ஆகிய 4 பேர் மீன்பிடிக்க சென்றனர். அப்போது இலங்கை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் கைது செய்து நெடுந்தீவு கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்