சிட்னி: ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி இந்திய விக்கெட்டுகள் திடீர் சரிவு

சனிக்கிழமை, 7 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

சிட்னி, ஜன. - 7 -  இந்திய அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற 2-வது கிரிக்கெட் டெஸ்ட்  போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 68 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் அசைக்க முடியாத முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் கேப்டன் மைக்கேல் கிளார்க் முச்சதம் அடித்தார். தவிர, ரிக்கி பாண்டிங் மற்றும் ஹஸ்சே இருவரும் சதம் அடித்தனர். இதனால் ஆஸி. அணி 600 ரன்னைத் தாண்டி பிரமாண்டமான ஸ்கோ ரை எட்டியது. பெளலிங்கின் போது, ஹில்பென்ஹாஸ், பட்டின்சன் மற்றும் சிட்லே ஆகிய மூவரும் சிறப்பாக பந்து வீசி முக்கிய விக்கெட்டுகளைக் கைப் பற்றி ஆஸி. அணியின் வெற்றிக்கு உதவினர்.  ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதன் 2-வது போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 3-ம் தேதி துவங்கி 4-வது நா ளான நேற்றுடன் முடிவடைந்தது.  இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்னி  ல் சுருண்டது. கேப்டன் தோனி 77 பந்தில் 57 ரன்னையும், டெண்டுல்க ர் 88 பந்தில் 41 ரன்னையும், சேவாக் 51 பந்தில் 30 ரன்னையும், கோக் லி 23 ரன்னையும் எடுத்தனர். பின்பு முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 659 ரரன்னைக் குவித்தது. கேப்டன் கிளார்க் 468 பந்தில் 329 ரன்னையும், ரிக்கி பாண்டிங் 225 பந்தில் 134 ரன்னையும், மைக் ஹஸ்சே 253 பந்தில் 150 ரன்னையும் எடுத்தனர். அடுத்து 2 -வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 110.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 400 ரன்னை எடுத்தது. இதனால் ஆஸி. அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 68 ரன் வித்தி.யாசத்தில் அபா ர வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. இந்திய அணி சார்பில் காம்பீர் 142 பந்தில் 88 ரன்னும், டெண்டுல்கர் 141 பந்தில் 80 ரன்னும், லக்ஷ்மண் 119 பந்தில் 66 ரன்னும், அஸ்வின் 76 பந்தில் 62 ரன்னையும், ஜாஹிர்கான் 35 ரன்னையும், டிராவிட் 29 ரன் னையும் எடுத்தனர். 

இந்திய அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரும் நிலைத்து ஆடத் தவ றியாதால் அணி தோல்வியைத் தழுவியது. யாராவது ஒருவர் நிலைத் து ஆடி இருந்தால் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்து இருக்கலாம். 

ஆஸ்திரேலிய அணி தரப்பில், ஹில்பென்ஹாஸ் 106 ரன்னைக் கொடு த்து 5 விக்கெட் எடுத்தார். சிட்லே 88 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பட்டின்சன், கேப்டன் கிளார்க், மற்றும் லியான் ஆகி யோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாய கனாக கேப்டன் மைக்கேல் கிளார்க் தேர்வு செய்யப்பட்டார்.  

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: