எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜன.- 7 - ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராம் கோமா நிலையில் இருப்பதாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அவரது வக்கீல் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த 1993-ம் ஆண்டு மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் சுக்ராம். இவரது பதவிக்காலத்தில் தொலைத்தொடர்புத்துறைக்கு தேவையான பொருட்களை சப்ளை செய்ய ஐதராபாத்தில் உள்ள ரேடியோ மாஸ்ட்ஸ் என்ற கம்பெனிக்கு கூடுதல் விலைக்கு காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது. இதனால் தொலைதொடர்புத்துறைக்கு கூடுதல் செலவாகியது. இதற்கு காரணமாக இருந்த சுக்ராம் மற்றும் அவரது துறையைச் சேர்ந்த பலர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் சுக்ராம், ஏ.ஆர்.எம். நிர்வாக இயக்குனர் பி.ராமராவ் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தொலைதொடர்புத்துறை துணை இயக்குனர் ஜெனரல் ருனு கோஷுக்கு 2 ஞுஆண்டு கடும் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து இவர்கள் டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். டெல்லி ஐகோர்ட்டும் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று உத்தரவிட்டது. இதையும் எதிர்த்து சுக்ராம், ருனு கோஷ், ராமராவ் ஆகிய மூவரும் சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் பி.சதாசிவம், ஜெ.செலமேஸ்வர் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரிக்க மறுத்துவிட்டது. அதோடு மட்டுமல்லாது தண்டனை வழங்கப்பட்ட காலத்தை சிறையில் அனுபவிக்க சிறப்பு கோர்ட்டில் முதலில் சரணடையுங்கள். அதன் பின்னர் உங்கள் அப்பீல் மனுவை விசாரிப்பது குறித்து பரிசீலனை செய்வோம் என்று நீதிபதிகள் எச்சரித்து உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சுக்ராமும் அவரது உதவியாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் சரணடையவில்லை. சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி தர்மேஷ் சர்மா முன்னிலையில் சுக்ராமின் வக்கீல் நேரில் ஆஜராகி ஒரு விளக்கத்தை அளித்தார். சுக்ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன. அவர் கோமா நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனவேதான் அவர் சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய முடியவில்லை என்று சுக்ராமின் வக்கீல் விளக்கமளித்தார். இந்த விளக்கத்தைக் கேட்ட சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி தர்மேஷ் சர்மா, இதுதொடர்பான விசாரணையை சனிக்கிழமை(இன்று)க்கு தள்ளிவைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


