ஒரே பாலினத்தில் 2 குழந்தைகளை தத்து எடுக்கலாம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

மும்பை,ஜன.22 - தம்பதிகள் ஏற்கனவே ஒரு குழந்தையை தத்து எடுத்திருந்தாலும் அதே பாலினத்தில் மற்றொரு குழந்தையும் விரும்பினால் தத்து எடுத்துக்கொள்ளலாம் என்று மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒரு சில தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம். அதனால் அவர்கள் தங்களுடைய வாரிசாக விரும்பிய குழந்தையை தத்து எடுத்துக்கொள்ள அரசியல் சட்டம் அனுமதிக்கிறது. அந்த குழந்தை ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தத்து எடுத்துக்கொள்ளலாம். 

இந்திய பூர்வீகத்தை கொண்டவர் கிறிஸ்டோபர் த்ருதி. இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு வாழ்ந்து வருகிறார். த்ருதியானவர் இந்திய பெண் ஷெனாஜ் என்பவரை திருமணம் செய்து தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். ஷெனாஜும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். இந்த தம்பதிகள் தற்போது அமெரிக்காவில் வசிக்கின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து ஏற்கனவே ஒரு இந்திய பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர். மேலும் ஒரு இந்திய பெண் குழந்தையை தத்து எடுக்க விரும்புகின்றனர். இதற்கு அனுமதி கொடுக்கும்படி மத்திய தத்தெடுப்பு ஆணையத்தின் அனுமதியுடன் செயல்பட்டு வரும் தத்து எடுத்தல் மற்றும் குழந்தைகள் நல சங்கத்தின் மூலம் மும்பை ஐகோர்ட்டை நாடினர். இது தொடர்பான மனுவை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு, ஒரு பாலினத்தை சேர்ந்த இரண்டாவது குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளலாம். அதாவது இரண்டு குழந்தைகள் பெண்ணாக இருந்தாலும் சரி. அல்லது ஆணாக இருந்தாலும் சரி. ஒரே பாலினத்தில் இரண்டு குழந்தைகளை தத்து எடுத்துக்கொள்ளலாம். இது தொடர்பாக கட்டுப்படுத்தும் எந்த சட்டமும் இல்லை என்று நீதிபதி கே.ஜி.கார்நிக் தீர்ப்பு வழங்கியுள்ளார். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: