முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரிசாவில் விஷசாராயம் குடித்ததில் பலி 32 ஆக உயர்வு

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புவனேஸ்வர்,பிப்.10 - ஒரிசா மாநிலத்தில் விஷசாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துவிட்டது. மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று மாநில கலால் வரித்துறை அமைச்சர் உதய சிங் தியோ ராஜினாமா செய்துவிட்டார். 

ஒரிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் மற்றும் ஹோர்தா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஏழை தொழிலாளர்கள் கடந்த 6-ம் தேதி அன்று சளி தொல்லையை போக்கும் என்று கருதி சாராயத்தில் ஒருவித மருந்தை சேர்த்து குடித்தனர். குடித்த சில நிமிடங்களில் பல பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்தனர். உடனே அவர்கள் கட்டாக் மற்றும் புவனேஸ்வர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பலனளிக்காமல் 13 பேர் பலியாகிவிட்டனர். மேலும் கடந்த புதன்கிழமை அன்று 17 பேர் பலியாகிவிட்டனர். நேற்று மேலும் 2 பேர் பலியாகிவிட்டனர். மருத்துவமனைகளில் சிசிச்சை பெற்றுவருபவர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதற்கிடையில் இந்த சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று மாநில கலால் வரித்துறை அமைச்சர் உதய சிங் தியோ ராஜினாமா செய்துவிட்டார். ராஜினாமா கடித்தை முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு அனுப்பிவிட்டார். ஆனால் தியோவின் ராஜினாமாவை முதல்வர் நவீன் பட்நாயக் ஏற்றுக்கொண்டாரா அல்லது இல்லையை என்பது குறித்து தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக மருந்து சப்ளை செய்த கடைக்காரர் மற்றும் சாராயம் காய்ச்சியவர் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்