எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தி ஹேக், ஜூன்.2 - நெதர்லாந்தில் உள்ள தி ஹேக்கில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் முதல் போட்டியில் இந்தியா, பெல்ஜியத்திடம் 2-3 என்ற கோல் கணக்கில் போராடித் தோல்வி தழுவியது.
ஆட்டத்தின் 18 மற்றும் 19வது நிமிடத்தில் பெல்ஜியத்திற்கு முதல் இரண்டு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதற்கான காரணத்தில் சந்தேகம் கொண்ட இந்திய அணி அது சரிதானா என்று மேல் முறையீடு செய்தனர். ஆனால் கார்னர் வாய்ப்பு தக்கவைக்கப்பட்டது. பெல்ஜியம் அடித்த கார்னர் ஷாட்டை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் அபாரமாகத் தடுத்தார். இந்த இரண்டு கார்னர் வாய்ப்புகளையும் இந்தியா சமாளித்துத் தப்பித்தாலும் ஆட்டத்தில் சூடு பிடிக்கவில்லை. மீண்டும் பெல்ஜியம் அணிக்கே கோல் வாய்ப்பு வந்தது அதனை மீண்டும் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் சமயோசிதமாகத் தடுத்து நிறுத்தினார்.
29வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்குக் கிடைத்த 3வது கார்னர் வாய்ப்பையும் அது தவறவிட்டது. ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் பெல்ஜியம் மீண்டும் ஒரு தாக்குதல் ஆட்டத்தை ஆட டி-வட்டத்திற்கு சற்று வெளியேயிருந்து பெல்ஜியம் வீரர் அடித்த ஷாட்டை கோல் அருகில் இருந்த புளோரண்ட் வான் ஆபெல் அருமையாகக் கோலாக மாற்றினார். பெல்ஜியம் 1-0 என்று முன்னிலை, இடைவேளை அறிவிக்கப்பட்டது.
2, 3 கோல்களை இந்தியா வாங்கியிருக்கும் ஆனால் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷினால் இந்தியாவுக்கு வாய்ப்புகள் இன்னமும் இருந்தது..இடைவேளைக்குப் பிறகு உத்தியை மாற்றிய இந்தியா பாதுகாப்பை சற்றே தளர்த்தி தாக்குதல் ஆட்டத்தைத் துவங்கியது. அதன் பலன் 44வது நிமிடத்தில் திடீரென ஒரு அபார மூவை இந்திய வீரர்கள் செய்ய பெல்ஜியம் எல்லைப்பகுதிக்குள் அடிக்கப்பட்ட பந்தை மந்தீப் சிங் அபாரமாக கோலாக மாற்ற அதிர்ச்சியடைந்தது பெல்ஜியம். ஆட்டம் 1-1. பிறகு ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் முழு தாக்குதல் ஆட்டத்தில் இருந்த பெல்ஜியம் பாதுகாப்பில் கோட்டை விட்டது. அதனைப் பயன்படுத்தி வேகமாக பந்தை எடுத்து சென்ற ரகுநாத் ஒரு ஷாட்டை அடிக்க அதனை ஆகாஷ்தீப் அருமையான கோலாக மாற்ற இந்திய வீரர்கள் கண்களில் வெற்றி நம்பிக்கைத் தெரியத் தொடங்கியது.
ஆனால் 56வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு இன்னொரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க சைமன் கூக்நார்ட் கோலாக அதை மாற்றினார். 2-2 என்று சமன் செய்தது பெல்ஜியம். மீண்டும் 60வது நிமிடத்தில் தனியாகவே விடப்பட்ட ஆகாஷ்தீப் பெல்ஜியம் கோலை நோக்கி ஒரு அடி அடித்தார் ஆனால் கோல் விழவில்லை. அதன் பிறகு பெல்ஜியம் 3வது கோலை அடிக்கும் முனைப்புடன் ஆட கோலுக்கு அருகில் பெல்ஜியம் வீரர் அடித்த ஷாட்டை கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் மீண்டும் அற்புதமாகத் தடுத்தார். பிறகு 6வது கார்னர் வாய்ப்பையும் பெல்ஜியம் கோலாக மாற்ற முடியவில்லை.
ஆட்டத்தின் 67வது நிமிடத்தில்தான் இந்தியாவுக்கு முதல் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை ரகுநாத் கோல்போஸ்டிற்கு மேல் அடித்து விரயம் செய்தார்.
அதன் பிறகு இருதரப்பிலும் ஆட்டம் சூடு பிடிக்க ஆட்டம் முடிய இன்னும் 15 வினாடிகளே இருக்கும் நிலையில் பெல்ஜியம் பந்தை இந்திய கோல் எல்லைக்குள் கொண்டு வந்து ஆட கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் முன்னால் வந்து தடுக்க நினைத்தார். இதனால் கோல் இடம் காலியானதைப் பயன்படுத்தி ஜான் டோமென் வெற்றிக் கோலாக மாற்றினார். இந்தியாவின் அத்தனை நேர கடின உழைப்பும் வீணானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


