முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கிலிருந்து 6 பஞ்சாப் மாநிலத்தவர் நாடு திரும்பினர்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

குர்தாஸ்பூர், ஜூன் 23 - ஈராக் நாட்டில் சிக்கித் தவித்த பஞ்சாப் மாநிலத்தவர் 6 பேர் பத்திரமாக வீடு திரும்பினர். இவர்கள் அனைவரும் குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 

ஈராக்கிலிருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்ததும் அங்கிருந்து குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள வீடுகளுக்கு வந்து சேர்ந்தனர். ஈராக்கில் இன்னலுக்கு உள் ளாகி வீடு வந்து சேர்ந்தவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், இராக்கில் போர் மூண்ட செய்தி கேட்டு தனது தம்பிக்கு என்ன ஆகுமோ என்ற அதிர்ச்சியில் மாரடைப்பால் சில தினங்களுக்கு முன் உயிரிழந்த அண்ணனின் நினைவால் கண் ணீர் விட்டு அழுதார். அவர் தங்கியிருந்த பகுதியை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றவே பிற இந்தியர்களுடன் சேர்ந்து தவித்ததாக தெரிவித்தார். 

இரு ஆண்டுகளுக்கு முன் ஜஸ்வந்த் சிங் இராக் சென்றதாகவும் அங்கு ஒரு நிறுவனத்தில் அவர் பணி யாற்றியதாகவும் அவரது குடும்பத் தார் தெரிவித்தனர் 

இதனிடையே, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த போரா முஸ்லிம் தம்பதி இருவர் ஈராக்கிலிருந்து பத்திரமாக இந்தூருக்கு நேற்று முன்தினம் வந்து சேர்ந்தனர். 

இராக்கில் உள்ள நஜப், கர்பாலா ஆகிய நகரங்களுக்கு புனிதப் பயண மாக மும்பையிலிருந்து சென்ற 80 பேர் குழுவில் முகமது ரத்லம்வாலா (45) ,மனைவி தஸ்லீம் இருவரும் இடம் பெற்றிருந்தனர். 

ஈராக்கில் போர் வெடித்த ஜூன் 3ல் இந்த குழு புறப்பட்டது தெஹ் ரானில் இறங்கியதும் அங்கிருந்து 1000 கிமீ தொலைவில் உள்ள கர்பாலாவுக்கு பஸ்ஸில் புறப் பட்டனர். கர்பாலா, நஜப் தவிர வேறு எங்கும் செல்ல அனுமதிக்கப்படாததால் தங்கள் குழுவுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என ரத்லம்வாலா தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்