முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கி., பார்லியில் இந்தியர்களுக்கு வாய்ப்பு தர விருப்பம்

திங்கட்கிழமை, 7 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஜூலை.8 - இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு தர பிரதமர் டேவிட் கேமரூன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கடந்த சில வருடங்களாக இந்திய வம்ாவளி எம்பிக்கள் எண்ணிக்கை கணிசமான அளவு அதகரித்து வருகிறது. அதே போல், வெள்ளையர்கள் அல்லாத இனத்தை சேர்ந்த எம்பிக்களின் எண்ணிக்கையும் ஓரளவுக்கு உயர்ந்துள்ளது. தொழிலாளர் கட்ி எம்பி கெயித்வாஸ் எழுதிய புத்தகம் ஒன்றுக்கு பிரதமர் டேவிட் கேமரூன் எழுதிய முன்னுரையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த முன்னுரையில், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வரலாற்றில் 170 ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக சிறுபான்மை இன எம்பி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது சுமார் 100 எம்பிக்கள் அதே போல் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் அவையில் உள்ளனர். இங்கிலாந்தில் வசித்து வரும் பல்வேறு இனங்கலின் மக்கள் தொகைக்கு ஏற்ப பாராளுமன்றத்தில் எம்பிக்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று பிரதமர் டேவிட் கேமரூன் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக நாம் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 1841-ஆம் ஆண்டு சத்பரி தொகுதியில் இருந்து முதன் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டேவிட் டைஸ் சோம்பே தேர்வு செய்யப்பட்டார். இவர் இந்தியாவில் உள்ள மீரட் மாவட்டத்தில் இருக்கும் சர்தானா என்ற இடத்தைச் சேர்ந்தவர். இவரைத் தொடர்ந்து 1892-ஆம் ஆண்டு இந்தியரான தாதாபாய் நெளரோஷி எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நூலை எழுதிய கெயித் வாஸ் 1987-ஆம் ஆண்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 1895-ல் மன்சார்ஜி பவுனாக்ரி, 1922-ல் சபூர்ஜி சக்லத்வாலாவைத் தொடர்ந்து, இவர்தான் இந்தியாவில் பிறந்த முதல் எம்பி ஆவார். 2015-ல் வரவிருக்கும் பொது தேர்தலில் இந்தியர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தற்போது பாராளுமன்றத்தில் 12 இந்திய எம்பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்