முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அல்ஜீரியாவில் 5.6 ரிக்டர் நிலநடுக்கம்: 6 பேர் பலி

சனிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

அல்ஜீரியர்ஸ், ஆக.03 - ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் அல்ஜீரியர்சபக்கப 50 கி.மீ. தெற்கே போமெர்ட்ஸ் பிலிடா பகுதிகளுக்கு இடையே பூமி அதிர்ந்தது.

இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்து ரோடுகளில் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. அப்போது உயிர் பிழைக்க மாடியில் இருந்த சிலர் குதித்தனர். அவர்களில் 4பேர் பரிதாபமாக இறந்தனர். அதிர்ச்சியில் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது. வீடுகள் இடிந்து தரைமட்டமானதில் 420 பேர் காயம் அடைந்தனர். பலர் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களை மீட்பு குழுவினர் காயங்களுடன் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சைக்கு பின் வீடுதிரும்பினர்.

20 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு 5.6 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது தலைநகர் அல்ஜீரியர்சிலும் உணரப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்