காமன்வெல்த் போட்டி நிறைவு: இந்தியாவுக்கு 5-வது இடம்

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2014      விளையாட்டு
Image Unavailable

 

கிளாஸ்கோ, ஆக.05 - ஸ்காட்லாந்தில் நடந்த 20வது காமன்வெல்த் போட்டி வண்ணமயமான நிறைவு விழாவுடன் கோலாகலமாக நிறைவடைந்தது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23ம் தேதி 20வது காமன்வெல்த் போட்டிகள் துவங்கியது. இங்கிலாந்திடன் ஆதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகள் இப்போட்டியில் பங்கேற்றன. சுமார் 11 நாட்கள் நடந்த இப்போட்டிகளின் முடிவில், 58 தங்கம், 59 வெள்ளி, 57 வெண்கலம் என மொத்தமாக 174 பதக்கங்களை குவித்த இங்கிலாந்து பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.

ஆஸ்திரேலியா மொத்தம் 137 பதக்கங்களை வென்று இடண்டாவது இடத்தை பிடித்தது. இதில், 49 தங்கம், 42 வெள்ளி, 46 வெண்கலம் அடங்கும்.

கனடா 32 தங்கம், 16 வெள்ளி, 34 வெண்கல பதங்கங்களுடன் மொத்தம் 82 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தையும் பெற்றது.

இதுவரை ஸ்காட்லாந்தில் நடக்கதாக அளவிற்கு சிறப்பாக கடந்த 11 நாட்கள் நடந்த இப்போட்டிகளின் நிறைவு விழா, ஹாம்டன் பார்க் மைதானத்தில் மிகவும் வண்ணமயமாக நடந்தது. சுமார் 40,000 ரசிகர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் 15,000 தன்ஆர்வலர்கள், 1,500 பணியாளர்கள், 30,000 ஒப்பந்ததாரர்கள், 1,800 காவலர்கள் என அனைவரும் மைதானத்தில் வரிசையாக நுழைந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இப்போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது. வரும் 2018ல் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடத்தப்படுவதை தெரிவிக்கும் விதத்தில் காமன்வெல்த் போட்டியில் பயன்படுத்தப்பட்ட கொடி ஒப்படைக்கப்பட்டது. இதைதொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பாப் பாடகி மினோக்கின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இறுதியாக ஸ்காட்லாந்து பாப்பாடகி லுாலுா அந்நாட்டின் 'சூட்' பாடலை பாட ரசிகர்கள், பணியாளர்கள், வீரர், வீராங்கனை என அனைரும் மைதானத்தில் நடனமாட மைதானத்தின் வெளியே வண்ணமயமாக வாணவேடிக்கையுடன் விழா கோலாகலமாக முடிவடைந்தது.

காமன்வெல்த்தில் இந்தியா 64 பதக்கங்களை வென்று 5வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில், 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கங்கள் அடக்கம். இந்தியாவில் இருந்து மொத்தம் 215 வீரர், வீராங்கனைகள் இப்போட்டிகளில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: