முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஸ்வின் உட்பட 15 பேருக்கு அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை

புதன்கிழமை, 13 ஆகஸ்ட் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.14 - தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உட்பட 15 பேருக்கு அர்ஜுனா விருது வழங்க தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விருதுக்கு தகுதியானவர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. விளையாட்டுத் துறையில் மிகவும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதுக்கு யாரும் பரிந்துரைக்கப்படவில்லை. அர்ஜுனா விருதுக்கு 15 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அவர்கள் விவரம் வருமாறு:

ரவிச்சந்திரன் அஸ்வின் (கிரிக்கெட்), அகிலேஷ் வர்மா (வில்வித்தை), டிண்டு லூகா (தடகளம்), எச்.என்.கிரிஷா (பாராஒலிம்பிக்ஸ்), வி.டிஜு (பாட்மின்டன்), கீது ஆன் ஜோஸ் (கைப்பந்து), ஜெய் பகவான் (குத்துச் சண்டை), அனிர்பான் லஹரி (கோல்ப்), மம்தா புஜாரி (கபடி), சாஜி தாமஸ் (படகுப் போட்டி), ஹீனா சித்து (துப்பாக்கிச் சுடுதல்), அனகா அலங்காமோனி (ஸ்குவாஷ்), டாம் ஜோசப் (கைப்பந்து), ரேணுபால் சானு (பளு தூக்குதல்), சுனில் ராணா (மல்யுத்தம்).

தேர்வுக் குழுவில் விளையாட்டுத் துறை சார்ந்த அஞ்சு பாபி ஜார்ஜ், குஞ்சராணி தேவி, இரண்டு செய்தியாளர்கள், அரசுத் தரப்பில் இந்திய விளையாட்டு ஆணைய இயக்குநர் ஜெனரல் ஜிஜி தாம்சன் உட்பட 3 பேர் இடம்பெற்றி ருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago