மாலியில் தற்கொலை படை தாக்குதல்: ஐ.நா ஊழியர்கள் பலி

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2014      உலகம்
UN-logo

 

பமாகோ, ஆக.18 - மாலி நாட்டில் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வந்த ஐநா ஊழியர்கள் 2 பேர் தற்கொலை படை தாக்குதலில் பலியானார்கள். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அல்கொய்தா தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த 2012-ஆம் ஆண்டு வடக்கு மாலி பகுதியை தீவிரவாதிகள் கைப்பற்றினர். பின்னர், பிரான்ஸ் உதவியுடன் மாலி ராணுவத்தினர் தீவிரவாதிகளுடன் போரிட்டு அந்த பகுதிகளை மீட்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த 2013-ஆம் ஆண்டு அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இந்நிலையில், வடக்கு மாலியில் அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்கள் நடத்துகின்றனர். தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் ஐநா சமாதான குழு ஈடுபட்டு வருகிறது.

கடந்த வாரம் இங்கு நடந்த சுரங்க விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ நா சமாதான குழுவினர் உதவினர். இப்பகுதிகளில் ஐநா சமாதான குழுவினரின் நிவாரண பணிகளுக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஐநா குழுவினர் உடனே வெளியேற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஐநா குழுவினர் மீது தற்கொலை படை தாக்குதல் நடந்தது.

இந்த தாக்குதலில் ஐநா ஊழியர்கள் 2 பேர் பலியானார்கல். மேலும் 7 பேர் காயமடைந்தனர். வடக்கு மாலியில் நிவாரணப் பணிகலை மேற்கொண்டு வரும் ஐநா குழுவினர் மீது நடைபெற்ற தாக்குதல் மிகவும் கண்டிக்கத் தக்கது என்று ஐ நா பொதுச் செயலாளரின் சிறப்பு தூதர் டேவிட் கிரஸ்லி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: