முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியாவில் இடைக்கால அரசு ராஜினாமா

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

பென்காசி, ஆக.31 - லிபியாவில் இடைக்கால அரசு ராஜினாமா செய்துள்ளது. பிரதமர் அப்துல்லா அல் தீன்னி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேர்தல் நடத்திய புதிய அரசு அமைவதற்கு ஏதுவாக பதவி விலகுகிறேன் என்று அப்துல்லா கூறியுள்ளார்.

அரசுக்கு எதிரான தீவிரவாத குழுக்கள் இணைந்து இஸ்லாமிய நிர்வாகத்தை தோற்றுவித்த அடுத்த நாளிலேயே பிரதமர் பதவி விலகியுள்ளார். இது அந்நாட்டின் அரசியல் ஸ்திரமற்ற நிலையை மேலும் அதிகரித்துள்ளது. நாட்டில் பாதி இடங்கள் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ளது. சமீபத்தில் தலைநகர் திரிபோலி விமான நிலையம், தொலைக்காட்சி நிலையம் ஆகியவற்றையும் தீவிரவாதி கள் கைப்பற்றினர்.

இடைக்கால அரசு கூட திரிபோலியில் செயல்படவில்லை. அங்கிருந்து 600 கி.மீ. தொலைவில் உள்ள தோப்ரூக் நகரிலேயே செயல்பட்டு வந்தது. அதுவும் அதிகாரமற்ற, பெயரளவுக்கு மட்டுமே அரசாகவே இருந்தது. நாட்டின் பல பகுதிகள் ஆயதக்குழுக்களில் கட்டுப்பாட்டில்தான் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்