ஜப்பானில் டிரம்ஸ் வாசித்து அசத்திய பிரதமர் மோடி!

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

டோக்கியோ, செப்.03 - 4 நாள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, டோக்கியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டிரம்ஸ் வாசித்து அனைவரையும் மகிழ்வித்தார்.

டோக்கியோவில், டாடா கன்சல்டன்சியின் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார அகாடமி துவக்க விழாவில் இந்தியப் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் கலந்து கொண்டனர். துவக்க விழாவில், ஜப்பானிய இசைக் கலைஞர்கள் டிரம்ஸ் வாசித்தனர். அவர்கள் வாசிப்பதைப் பார்த்து பிரதமர் மோடியும் டிரம்ஸ் வாசிக்கத் துவங்கினார். இந்தியப் பிரதமரின் டிரம்ஸ் வாசிப்பதைக் கண்டு பார்வையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்னர் பேசிய மோடி: 21-ம் நூற்றாண்டில் அறிவுசார் திறனை மேம்படுத்திக் கொள்பவர்கள் மற்றவர்களைவிட சிறந்தவராக விளங்குவர். எனவே அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். பிரதமர் மோடி, ஜப்பானிய பள்ளிக் குழந்தைகளுக்கு புல்லாங்குழல் வாசித்து, கிருஷ்ணர் கதையும் சொன்னார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: