பாகிஸ்தானின் இதுவரை 900 தலிபான்கள் சுட்டு கொலை

வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், செப்.5 - பாகிஸ்தானில் வடக்கு வஜிரிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 900 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். என்று ராணுவம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணங்களின் தலிபான் தீவிரவாதிகள் முகாம்கள் அமைத்து, தீவிரவாதிகள் முகாம்கள் அமைத்து. தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, வடக்கு வஜிரிஸ்தான் மாரகாணத்தில் முகாம்கலை அமைத்து பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தலிபான் கள் தற்பொலை படை தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் கராச்சி மற்றும் விமானநிலையத்தை கைப்பற்றும் நடவடிக்கையில் தலிபான்கள் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் பாதுகாப்பு படை யினர் உள்பட ஏராளமாவர்கள் பலியாகினர்.

இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 15-ஆம் தேது முதல் வடக்கு வஜிரிஸ்தான் ராணுவத்தின் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். வடக்கு வஜிரிஸ்தான், பலிசிஸ்தான் உள்ளிட்ட பிராந்தியங்கலில் நடைபெற்ற பாகிஸ்தான் ராணுவத் தின வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலில் உதுவரை மொத்தம் 910 தலிபான் தீவிரவாதிகல் சுட்டு கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலின் போது ராணுவதரப்பில் 82 வீரர்கல் பலியானார்கள் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் தலிபான்களின் 27 ராக்கெட் மற்றும் ஆயுத தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டன. 114 தலிபான் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

ஆப்பிராந்தியங்களில் வசித்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பன்னு, தேரா இஸ்மாயில்கான் மற்றும் டாங்கக் மாவட்டங்கலில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவனு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. தலிபான்கள் மீதான நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் ராணுவம் முதல் முறையாக அரிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: