முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய முஸ்லிம்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுவதில்லை

செவ்வாய்க்கிழமை, 14 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஆஸ்லோ, அக் 15 - இந்திய முஸ்லிம்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுவது இல்லை என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். நார்வேயில் ஐந்து நாள் பயணத்தைத் தொடங்கியுள்ள அவர் அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய முஸ்லிம்களில் யாரும் தீவிரவாத பாதையை தேர்ந்தெடுப்பது இல்லை. எல்லை தாண்டிய தீவிரவாதத்தால்தான் இந்தியா பாதிக்கப்படுகிறது, தீவிரவாதிகளுக்கு மத நம்பிக்கை கிடையாது. அவர்களின் ஒரே கொள்கை, அழிவு மட்டுமே.

இந்தியா, பாகிஸ்தான் இடையே 1972-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிம்லா ஒப்பந்தம், 1999-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட லாகூர் பிரகடனம் ஆகியவை மூலம் இருநாட்டுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய, பாகிஸ்தான் பிரதமர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்ற மலாலாவின் கோரிக்கை குறித்த‌ கேள்விக்கு, 'இது பிரதமர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம், நான் கருத்து எதுவும் கூற முடியாது' என்றார்.

நார்வே சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு பின்லாந்துக்கு பிரணாப் முகர்ஜி செல்கிறார். அப்போது இந்தியா, பின்லாந்து இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்