முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ராயபுரத்தில் முதுகலை மாணவர் விடுதியில் ஆய்வு

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - சென்னை மாவட்டம், ராயபுரத்தில் ஒரே வளாகத்தில் இயங்கி வந்த 8 (இளங்கலை, முதுகலை, ஐ.டி.ஐ) விடுதிகளில், 2 விடுதிகளைச் சார்ந்த 175 மாணவிகளை, ஏற்கனவே திறந்து வைக்கப்பட்ட, வேப்பேரி ஆதிதிராவிடர் மாணவியர் விடுதிக்கு 22.11.2014 அன்று இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது இயங்கி வருகிறது.
அவ்விடுதிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந. சுப்ரமணியன் ஆய்வுசெய்யப்பட்டது. விடுதி மாணவியரிடம் அமைச்சர் ந. சுப்ரமணியன் அவ்விடுதிகளில் வழங்கப்படும் அடிப்படை வசதிகளின் நிலை மற்றும் உணவுகள் வழங்கப்படுவதை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மாண்புமிகு அமைச்சர் ந. சுப்ரமணியன், விடுதியினை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், நன்முறையில் கல்வி கற்றிடவும், நன்நெறி வலியுறுத்தப்பட்டது.
மேலும் நேற்று சென்னை, ராயபுரத்தில் உள்ள அரசு (ஆதிந) முதுகலை மாணவர் விடுதி மற்றும் அரசு (ஆதிந) பள்ளி மாணவர் விடுதிகள்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந. சுப்ரமணியன் ஆய்வு செய்யப்பட்டது. அமைச்சர் ந. சுப்ரமணியன்விடுதிகளின் நீர்தேக்கத்தொட்டி, சமையலறை மற்றும் கழிவறைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள காப்பாளர்களை அறிவுறுத்தினார். விடுதி ஆய்வின் போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர், கண்ணகி பாக்கியநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர், எஸ். சிவசண்முகராஜா, மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து