எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையத்தினையும் திறந்து வைத்து காணொலி காட்சியின் மூலம் தஞ்சாவூர் இரயில் நிலையத்தில் மேல் வகுப்பு மற்றும் பொது வகுப்பு காத்திருப்பு அறை, மதுரை ரயில் நிலையத்தில் இரு மின் தூக்கிகளையும் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு , மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, மாநிலங்களை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், ஆகியோர் முன்னிலையில் மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு இன்று (12.03.2017) திறந்து வைத்தார்கள்.
தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையத்தினையும் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு பேசியதாவது,
முன்னாள் முதலமைச்சர் அம்மா மறைவிற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக் காலத்தில் நான் அமைச்சராக இருந்தபொழுது அம்மா அவர்களுடன் பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. முன்னாள் முதலமைச்சர் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும், பாரத நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பாகும். தமிழ்நாட்டில் வளர்ச்சியின் உட்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரயில்வே துறைக்கு 2017-18ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முதலீடாக ரூ.2,287 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இரயில் நிலையங்களை பயணிகளின் வசதிக்காக ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே நிலையங்களில் பல புதுமையான வசதிகளை செய்து வருகின்றது. அதில் ஒரு கட்டமாக இன்று கும்பகோணத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாகும். இங்கு வரக்கூடிய பயணிகளுக்கு வசதிக்காக கும்பகோணம் ரயில்வே நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையமும், வரலாற்று சிறப்புமிக்க தஞ்சாவூர், ரயில் நிலையத்தில் மேல் வகுப்பு காத்திருப்பு அறை மற்றும் அனைத்து வகுப்பினர் பயன் அடையும் வகையில் ஓய்வறை, பல சிறப்புகளை கொண்ட மதுரை, ரயில் நிலையத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த இரும்பு மின் தூக்கிகள் தற்பொழுது மதுரை ரயில் நிலையத்தில் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க கும்பகோணம் ரயில் நிலையத்தில் சுவாமி விவேகானந்தர் சிகாகா நகருக்கு சென்று தாயகம் திரும்பி வந்த போது கும்பகோணம் ரயில் நிலையத்தில் எழுச்சிமிகு உரையாற்றினார். அதனை நினைவு கூறும் வகையில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் அருட்காட்;சியகம் அமைக்கப்படும். இது அமைவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் நிதியிலிருந்து நிதி ஒதுக்கி தரலாம். மேலும் பொது மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என மத்திய இரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு பேசினார்.
தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையத்தினையும் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு பேசியதாவது,
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்களின் வழியில் நடக்கின்ற தமிழக அரசு மக்களின் தேவையினை அறிந்து செயல்படும் அரசாக இருந்து வருகின்றது. தஞ்சாவூர் மக்களின் கோரிக்கையான தஞ்சாவூர் - விழுப்புரம் ரயில் பாதையை முன்னுரிமை அடிப்படையில் இரட்டை வழி பாதையாக விரைவில் மாற்றி தர வேண்டும். மயிலாடுதுறை- தரங்கம்பாடி மீட்டர் கேஜ் இரயில் பாதை அகற்றப்பட்டு, பல ஆண்டுகளாக இருப்பில் உள்ளது. அதனை விரைவுப்படுத்தி அகலப்பாதையாக மாற்றித் தர வேண்டும். கும்பகோணம் ரயில் நிலையத்தில் நடைமேடை எண்ணிக்கை அதிகரித்து தர வேண்டும். கும்பகோணம் ரயில் நிலையம் நாட்டிலேயே தூய்மை பராமரிப்பில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. எனவே கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் வை-பை வசதிகள் செய்து தர வேண்டும். திருச்சி-மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் சிறப்பு இரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும்.
கும்பகோணம்-விருத்தசலம் புதிய ரயில் பாதை அமைத்து தர வேண்டும். செந்தூர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு இரயில்கள் மற்றும் ஏனைய விரைவு ரயில்கள் பாபநாசம் மற்றும் ஆடுதுறை ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும். நரசிங்கன்பேட்;டை, சுவாமிமலை நிலையங்களில், திருநெல்வேலி பயணிகள் ரயில் நின்று செல்ல வேண்டும். கும்பகோணம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் சேவையினை இரவு 11.00 மணிலிருந்து காலை 6.00 மணி வரை இரண்டு கவுண்டரில் வழங்கிட வேண்டும். பாபநாசம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும். சென்னை எழும்பூர் திருச்சிராப்பள்ளி பகல் நேர சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் படுக்கை வசதிகளுக்கு பதில் இருக்கை வசதிகளை பெட்டிகள் கொண்டதாக இருக்க வேண்டும். கும்பகோணத்தில் ரயில் பெட்டி பராமரிப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். வாரந்திர ராமேஸ்வரம், மண்டுதியா எக்ஸ்பிரஸ் ரயில் வசதியினை அதிகப்படுத்தி தர வேண்டும். முன்பு மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு கைவிடப்பட்ட அனைத்து சென்னை-தூத்துக்குடி-ஜனதா விரைவு ரயில், சென்னை-செங்கோட்டை பாசஞ்சர். தஞ்சை-விழுப்புரம் பாசஞ்சர் உள்ளிட்ட ரயில்களை மீண்டும் இயக்கிட வேண்டும். புதிய ரயில் வசதிகளாக கும்பகோணம் - குருவாயூர், தஞ்சாவூர்-ஹீப்ளி, தஞ்சாவூர்-மும்பாய், திருச்சி-திருநெல்வேலி இடையிலோன இன்டர் சிட்டி ரயிலினை மயிலாடுதுறை வரை நீட்டித்து, புதிய ரயில் சேவை அமைத்து தர வேண்டும். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கையாக நானும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் வைத்துள்ளோம்.
மத்திய அரசின் திட்டங்களை அம்மா வழியில் வந்த தமிழக அரசு சிறப்பான முறையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகின்றது. 144 ஆண்டுகள் கண்டிராத கடுமையான வறட்சி தமிழகத்தில் நிலவி வருகின்றது. விவசாயிகளும் பொது மக்களும் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றார்கள். கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகின்றது. குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க அம்மா அரசு போர் கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக தமிழ் நாடு முதலமைச்சர் பாரத பிரதமர் அவர்களை சந்தித்து கோரிக்கைகளை வைத்துள்ளார்கள்.
ரயில்வே துறை அமைச்சர் அவர்களிடம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான ரயில் திட்டங்கள் குறித்த கோரிக்கையினை நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு பேசினார்கள்
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகன், கும்பகோணம் சட்ட மன்ற உறுப்பினர் க.அன்பழகன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் இராம.இராமநாதன், ராம்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ்.மோகன், முன்னாள் ஒன்றியத் தலைவர் அசோக்குமார், சோழபுரம் அறிவழகன், ரயில்வே பொது மேலாளர் வசித்தாஜோரி, திருச்சிராப்பள்ளி ரயில்வே மண்டல மேலாளர் ஏ.கே.அகர்வால், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
சென்னை விமானநிலையத்தில் 10 விமானங்கள் ரத்து
08 May 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்ரீநகர் உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களில் பாகிஸ்தான நடத்த இருந்த தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா
08 May 2025புதுடெல்லி: ஸ்ரீநகர், பதன்கோட், ஜலந்தர் உள்ளிட்ட இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
-
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் * 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்கள் * தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 May 2025திருச்சி: திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் மற்றும் 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்க
-
பாராளுமன்றத்தை கூட்ட ராகுல் காந்தி வலியுறுத்தல்
08 May 2025புதுடெல்லி, பாராளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
-
சென்னை வெற்றியால் நெருக்கடி: பிளே ஆப்-க்கு முன்னேறுமா கொல்கத்தா?
08 May 2025கொல்கத்தா, சென்னை வெற்றியால் கொல்கத்தாவின் பிளே ஆப் வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை வெற்றி...
-
ரூ.60 ஆயிரம் கோடியில் தொழிற்கல்வி மேம்பாட்டு திட்டம்:மத்திய அமைச்சரவை ஒப்புதல்
08 May 2025புதுடெல்லி, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் தேசிய திறன் பயிற்சி நிறுவன மேம்பாட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது
-
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காத பிரதமர் மோடி..!
08 May 2025டெல்லி, எல்லையில் ஏற்பட்டிருக்கும் போர்ப் பதற்றம் தொடர்பாக நேற்று (மே 8) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை.
-
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தலைவர்கள் முதிர்ச்சியை வெளிப்படுத்தினர்: கிரண் ரிஜிஜு
08 May 2025புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற வி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-05-2025
09 May 2025 -
இந்தியா - பாக். இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் அமெரிக்க அதிபர் அறிவிப்பு
08 May 2025வாஷிங்டன்: இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசுக்கு முழு ஆதரவு: ராகுல் காந்தி
08 May 2025புதுடில்லி, மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
-
மனவலிமைதான் முக்கியம்: இளம் வீரர்களுக்கு தோனி அறிவுரை
08 May 2025சென்னை, தொழில்நுட்ப ரீதியாக திறமை வாய்ந்தவர்கள் எப்போதும் ரன்களை குவிப்பதில்லை. மனவலிமை முக்கியம் என எம்.எஸ்.தோனி கூறியுள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் - சச்சின் வரவேற்பு
08 May 2025ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வரவேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் சச்சின் வெளியிட்டுளள பதிவில் கூறியுள்ளதாவது: ஒற்றுமையில் நாம் அச்சமற்று இருக்கிறோம்.
-
ரூ.2 ஆயிரம் கோடி பத்திரங்கள் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு
08 May 2025சென்னை, தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 2,000 கோடி மதிப்பில் 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1,000 கோடி மற்றும் 15 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1,000 கோடி ஏ
-
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அரியலூர் மாவட்டம் முதலிடம்
08 May 2025சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நேற்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.
-
மாணவர்களுக்கு ஆளுமைமிக்க நாற்காலி காத்து கொண்டிக்கிறது அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு
08 May 2025சென்னை: மாணவச் செல்வங்கள் ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் ஆளுமைமிக்க நாற்காலி காத்துக்கொண்டிக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
பதற்றத்தை ஏற்படுத்தவில்லை: பதிலடி மட்டுமே இந்தியா கொடுக்கிறது: மத்திய அரசு
08 May 2025புதுடெல்லி, இந்தியா பதற்றத்தை ஏற்படுத்தவில்லை, பதிலடி மட்டுமே கொடுக்கிறது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
-
சட்டப்பேரவை பேச்சை முழுமையாக வெளியிட்டால் தி.மு.க. ஆட்சி பாதாளத்துக்கு போய்விடும் - இ.பி.எஸ்
08 May 2025சேலம்: சட்டப்பேரவையில் நான் பேசுவதை முழுமையாக ஒளிபரப்பினால் திமுக ஆட்சி உடனடியாக அதல பாதாளத்துக்கு போய்விடும்.” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
ஜெய்சங்கருடன் சவுதி அமைச்சர் திடீர் சந்திப்பு
08 May 2025புதுடெல்லி: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்ஜுபை நேற்று (மே 8) இந
-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
08 May 2025சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து எடப்பாடிக்கு ஆர்.எஸ் பாரதி பதில் அளித்துள்ளார்.
-
டெல்லியே திரும்பிப் பார்க்கும் அளவில் நம்முடைய மாதிரிப்பள்ளி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
08 May 2025திருச்சி: டெல்லியே திரும்பிப் பார்க்கும் வகையில் நம்முடைய மாதிரிப் பள்ளி உருவாகியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதிய இலக்கை நோக்கிச்செல்லுங்கள்: மாணவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
08 May 2025சென்னை: பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
-
போர்ப் பதற்றம் எதிரொலி: பஞ்சாப் - மும்பை போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம்
08 May 2025அகமதாபாத், போர்ப் பதற்றம் எதிரொலியால் பஞ்சாப் - மும்பை போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தான் திரைப்படங்கள்: ஓ.டி.டி. தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
08 May 2025புதுடெல்லி, ஓ.டி.டி.
-
இந்தியாவில் இணையசேவை: எலான் மஸ்க் நிறுவனத்துக்கு ஒப்புதல்
08 May 2025டெல்லி, இந்தியாவில் சேவையைத் தொடங்க ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.