முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானநிலையங்கள் பாதுகாப்பு: அமித்ஷா தலைமையில் ஆய்வுக்கூட்டம்

வெள்ளிக்கிழமை, 9 மே 2025      இந்தியா
Amit-Shah 3

புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிவரும் ராணுவ மோதல்களுக்கு மத்தியில், நாட்டிலுள்ள விமானநிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் நடந்த ஊடுருவல் முயற்சியை முறியடித்து, 7 பயங்கரவாதிகளைக் கொன்றதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்த சில மணிநேரத்துக்கு பின்பு உள்துறை அமைச்சரின் இந்த ஆய்வுக்கூட்டம் நடந்துள்ளது. அந்தக் கூட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் உள்ள நிலைமைகளை பற்றி அதிகாரிகளோடு ஆலோசித்தது மட்டும் இல்லாமல், நாட்டிலுள்ள விமானநிலையங்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்ததாக தெரிகிறது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளை எல்லைப் பாதுகாப்புப்படை கண்காணித்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், நாட்டிலுள்ள விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்டவைகளைப் பாதுகாக்கும் பணிகளில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மத்திய உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன், புலனாய்வு முகமையின் இயக்குநர் தாபன் தேகா, எல்லை பாதுகாப்புப்படை (பி.எஸ்.எப்), மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்), சிவில் விமான போக்குவரத்து முகமையின் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து