முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நீர் பங்கீடு பிரச்னையை அனைத்துக்கட்சியினருடன் சித்தராமையா ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      அரசியல்
Image Unavailable

பெங்களூரு  - பெங்களூர் : பற்றாக்குறை காலத்தில் காவிரி நீரை பகிர்வது குறித்து ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு அமைப்பது குறித்து அனைத்து கட்சியினரிடமும் முதல்வர் சித்தராமையா கருத்து கேட்டார். தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்க அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் கடந்த 5-2-2007ல் வழங்கிய இறுதித் தீர்ப்பில் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு, கர்நாடகா 192 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும் என்று நடுவர் மன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது.

ஆனால் காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக கடந்த நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளும் மனுக்கள் தாக்கல் செய்தன.இந்த அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றம் ஏற்கனவே 15 நாட்களுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பலமுறை உத்தரவிட்ட போதும், கர்நகாடகாஅரசு பற்றாக்குறையை காரணம் காட்டி தண்ணீர் திறந்துவிடவில்லை.

இந்நிலையில் பற்றாக்குறை காலத்தில் காவிரி நீரை தமிழகம்,கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பங்கிட்டு கொள்வது குறித்து கருத்து தெரிவிக்குமாறு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு கூறியிருந்தது.இதன் அடிப்படையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தரமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்நடைபெற்றது. தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் 4 மாநிலங்கள்எவ்வாறு நீரை பகிர்ந்து கொள்வது என்று அரசியல்கட்சியினரிடம் ஆலோசனை நடத்தப்பட்ட. மேலும் பற்றாக்குறை கால நீரை பகிர்ந்துகொள்வதற்கான குழுவை அமைப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago