முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்களித்த பிறகு பிரச்சாரம் செய்ததாக பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங். புகார்

வியாழக்கிழமை, 14 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

அகமதாபாத்: வாக்களித்த பிறகு வீதி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.

68 சதவீதம் வாக்குகள்
182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9, 14–ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் கடந்த 9-ம் தேதி நடந்தது. அதில் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவானது.   இந்த நிலையில் எஞ்சிய 93 தொகுதிகளுக்கு 2–வது மற்றும் இறுதிக்கட்டமாக தேர்தல் நேற்று தேர்தல் துவங்கி நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியதும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

பிரதமர் குஜராத் வருகை
பிரதமர் மோடியின் சொந்த மாநிலம், குஜராத் என்பதால் பிரதமர் மோடி நேற்று வாக்களிக்க குஜராத் வருகை தந்தார். அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரனிப் என்ற இடத்தில் உள்ள 115 - வது எண் வாக்குச்சாவடியில்  பிரதமர் மோடி   வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களிக்க வருகை தந்திருந்த மோடி,  சக வாக்காளர்களிடம் மிகவும் சகஜமாக  பேசிக்கொண்டு இருந்தார். பிரதமர் மோடியை பார்த்ததும் அங்குள்ள வாக்காளர்கள் உற்சாகமாக அவரைப்பார்த்து மோடி மோடி என்று கோஷம் எழுப்பினர்.

தேர்தல் ஆணையத்தில்...
இதற்கிடையில்,  பிரதமர் மோடி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  வாக்களித்த பிறகு வீதிப் பிரசாரத்தில் மோடி ஈடுபட்டதாக, தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ், மோடிக்கு எதிராக புகார் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து