முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனித இதய பார்சலுடன் சென்ற விமானம் துரிதமாக தரையிறக்கம்

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

கலிபோர்னியா, அமெரிக்காவில் விமானம் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த மனித இதயத்தால் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த விமானம் வந்த இடத்திற்கே திரும்ப அனுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து வாஷிங்டனில் உள்ள சியாட்டில் விமான நிலையத்திற்கு சவுத்வெஸ்ட் விமானம் மூலம் இதயம் ஒன்று பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த இதயம் விமானம் தரையிறங்கிய பின் பார்சல் அலுவலகத்திற்கு கொண்டு வரப்படவில்லை. இந்த இதயம் விமானத்திலேயே இருந்துள்ளது. அதன்பின் அந்த விமானம் டெக்ஸாஸில் உள்ள டல்லாஸ் விமான நிலையத்தில் புறப்பட்டு இருக்கிறது. விமானிகளுக்கு விமானம் புறப்பட்டு பாதி தூரம் சென்ற பின்புதான் தகவல் தரப்பட்டுள்ளது.

இதையடுத்து விமானம் மீண்டும் சியாட்டில் நோக்கி திரும்பி சென்றது. மொத்தம் 4 மணி நேரம் பயணம் செய்து விமானம் மீண்டும் சியாட்டில் விமான நிலையத்திற்கு சென்றது. விமானத்திற்குள் இருந்த இதயம் பாதுகாப்பாக போதிய மருத்துவ முறைகளின் படி சீல் செய்யப்பட்டு இருந்துள்ளது. இந்த விஷயம் தெரிந்த பயணிகள் விமானத்தில் பீதிக்கு உள்ளாகினர். விமானம் மீண்டும் சியாட்டில் விமான நிலையத்தில் தரையிறங்கிய உடன் வெகுவேகமாக ஆம்புலன்ஸ் மூலம் இதயம் வெளியே கொண்டு செல்லப்பட்டது. ஆனால் இது எங்கு கொண்டு செல்லப்பட்டது என்று விவரங்கள் வெளியாகவில்லை. இது யாருக்காக எடுத்து செல்லப்பட்டது என்றும் கூறப்படவில்லை. ஆனால் இந்த இதயம் பேக் செய்யப்பட்டு 8-9 மணி நேரம் ஆனதால், இது செயல்படாத நிலைக்கு சென்று இருக்க வாய்ப்புள்ளது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து