முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனிக்காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க டிப்ஸ்

செவ்வாய்க்கிழமை, 25 டிசம்பர் 2018      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது உடல் பலவீனமாகும். அதற்கு மிளகு, துளசி, கறிவேப்பிலை, மஞ்சள், கொத்தமல்லி, தனியா, இஞ்சி, பூண்டு, சீரகம், தை மாதத்தில் விளையும் காய்கறிகள், பழங்கள், கிழங்குகள், பயறு வகைகள் ஆகியவற்றைப் பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட, குழந்தைகளுக்கும் பால் மூலமாக நோய் எதிர்பாற்றல் கிடைக்கும்.

பால் குடிக்காத குழந்தைகளுக்கு தை மாதத்தில் அதிகமாக விற்கப்படும் பயறு வகைகளை நன்கு வேக வைத்து மசித்துக் கொடுங்கள். மிளகு ரசம், சூப் என இதில் நம் இந்திய மசாலாக்களைச் சேர்த்துக் கொடுக்க நல்ல ஆகாரமாக இருக்கும். பனிக்காலத்தில், வானிலை ஒத்துக் கொள்ளாமல் காய்ச்சல் ஏற்படும் போது மிகவும் ஸ்பைசியான உணவுகளைத் தர வேண்டாம். அதாவது எண்ணெய், தேவையில்லாத மசாலா கலந்த உணவுகளைக் கொடுக்க வேண்டாம். இட்லி, இடியாப்பம், சம்பா கோதுமையில் செய்த உப்புமா, அரிசி கஞ்சி, பிரெட், புதினா துவையல், கறிவேப்பிலை துவையல் போன்றவற்றைச் சாப்பிட கொடுங்கள்.

 இந்த சீசனில் விளைகின்ற மாதுளை, ஆப்பிள், சப்போட்டா போன்றவற்றைக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சாத்துக்குடி, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி கிடைத்தால் அதைப் பழமாகத் தராமல் இளஞ்சூடான நீரில் கலந்த ஜூஸாக அளவுடன் தரலாம். புளிப்பு சுவையுள்ள சிட்ரஸ் பழங்களில்தான் விட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. நோய் எதிர்ப்பாற்றலை அள்ளித் தரும் பழங்கள் இவை. பச்சை திராட்சையும், பச்சை வாழைப் பழத்தையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

பனிக் காலத்தில் சில குழந்தைகளுக்கு தொண்டையில் பிரச்னை ஏற்படும். எனவே அவர்களுக்கு எப்போதும் வெது வெதுப்பான தண்ணீரைக் குடிக்கக் கொடுங்கள்.

துளசி - 4 இலைகள், கிராம்பு -1, மிளகு -1, ஏலக்காய் -1, சீரகம் - அரை டீஸ்பூன் இவற்றை எல்லாம் போட்டு கொதிக்க வைத்து, ஆறவைத்து வடிகட்டி, அந்தத் தண்ணீரைக் குடித்தால் சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் வராது. தொண்டை வலி வராமல் தடுக்கப்படும்.

துளசி கிடைக்கவில்லை என்றால் கவலை வேண்டாம். கற்பூரவல்லி இலை - 1, தூதுவளை கீரை - 2 டீஸ்பூன் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து வடிகட்டி, இரண்டு டீஸ்பூன் அளவுக்குக் குழந்தைக்கு கொடுங்கள். பஞ்சில் ஒரு சொட்டு யூக்கலிப்டிக்ஸ் தைலம் சேர்த்து, குழந்தைகள் இரவில் தூங்குவதற்கு முன்பாக அவர்களுடைய காதுகளின் பின்புறங்களில் லேசாகத் தடவுங்கள். எந்த உணவாக இருந்தாலும் அதைக் குளிர்ச்சியாகத் தர வேண்டாம். குறிப்பாக ப்ரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை அப்படியே எடுத்துக் குழந்தைகளுக்கு சாப்பிட தராதீர்கள்.

உணவுகளைச் சூடாக குழந்தைக்கு சாப்பிடத் தர வேண்டும். குளிர்ச்சியான திரவ உணவுக்குப் பதிலாகச் சூடான சூப் போன்ற பொருட்களைச் செய்துக் கொடுங்கள்.

இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது சிறிது பஞ்சைக் காதில் வைத்துக் கொண்டு சென்றால் குளிர் காற்றிலிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கலாம்.

குழந்தைகளுக்கு மப்ளர், ஸ்வெட்டர், சாக்ஸ் அணிவித்து அழைத்துச் செல்ல வேண்டும்.
எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்கவும்.

இந்த நாட்களில் பனியின் தாக்கத்தால் குழந்தையின் சருமம் வறண்டுபோகும். எனவே அவர்களுக்கு அவ்வப்போது தேங்காய் எண்ணெயை உடலில் தேய்த்துவிடுங்கள்.

அல்லது குழந்தைக்கு பயன்படுத்தும் மாய்ஸ்சரைசர் கிரீம்களை மருத்துவரின் பரிந்துரைப்படி தடவலாம்.

செல்வராஜ்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து