முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 8 பெப்ரவரி 2019      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் பிரியங்கா காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல் முறையாக பங்கேற்றார்.  

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. இவர் தேர்தல் சமயங்களில் தனது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனித்து அவர்களுக்கு உதவி வந்தார். வாக்காளர்களை சந்தித்து ஆதரவும் திரட்டினார். ஆனால் கட்சியில் நேரடியாக எந்த பொறுப்பும் வகிக்காமல் இருந்தார். கட்சிப் பணிகளிலும் ஈடுபடாமல் இருந்தார். 

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சி பணிகளை பிரியங்கா காந்தி கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டது. பிரியங்காவுக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது தொண்டர்களை உற்சாகம் அடைய செய்தது.

இதற்கிடையே, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் உ.பி. மாநிலம் (கிழக்கு) பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.  பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் பிரியங்கா காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல் முறையாக நேற்று பங்கேற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து