வாக்காளர்களே திருத்திக் கொள்ளும் செயலி- 2. 33 லட்சம் பேர் விவரங்களை திருத்தினர்: தேர்தல் அதிகாரி சாகு தகவல்

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2019      தமிழகம்
Satyabrata Sahu  2019 03 31

வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே சரிபார்க்கும் திட்டத்தின் மூலம் இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் பேர் தங்களது விவரங்களைத் திருத்தி பயனடைந்துள்ளனர் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக மகளிர் திட்ட மேலாண்மை இயக்குனரோடு ஆலோசணை மேற்கொண்டு வருகிறோம். மகளிர் குழுக்கள் மூலமாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்க டவடிக்கை மேற்கொள்ள முயற்சி எடுக்கப்படும். தலைமைச் செயலகத்தில் உள்ள ஒவ்வொரு துறை சார்ந்த இரண்டு பேருக்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்து, மற்ற ஊழியர்களின் பெயர்களைத் திருத்தம் செய்ய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் 18 ஆயிரம் பேர் பெயர் திருத்தம் செய்துள்ளனர். வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்திக் கொள்ளும் செயலி மூலம் இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் பெயர் மற்றும் முகவரிகளை சரிபார்த்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து