முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிக்கெட் போட்டியின் போது வாட்டர் பாய்-ஆக மாறிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய பிரெசிடென்ட் லெவன் - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது பிரதமர் ஸ்காட் மோரிசன் வாட்டர் பாய்-ஆக மாறினார்.

இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் 27-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக இலங்கை அணி ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பெற்றது. ஆஸ்திரேலிய பிரெசிடென்ட் லெவன் அணியில் அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசனும் ஒருவர். இவர் நேற்று முன்தினம் வீரர்களுடன் அமர்ந்திருந்தார். ஆஸ்திரேலிய பிரெசிடென்ட் லெவன் அணி பீல்டிங் செய்து கொண்டிருக்கும் போது தேனீர் இடைவேளையின்போது மோரிசன் வாட்டர் பாய்-ஆக மாறி கூல்டிரிங்ஸ் சுமந்து கொண்டு மைதானதிற்கு சென்றார். இந்த காட்சி கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. டுவிட்டர்வாசிகள் அவரது எளிமையை பாராட்டி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து