ஆஸ்திரேலியா ஓபன்: நவோமி ஒசாகாவை வெளியேற்றிய 15 வயது இளம் வீராங்கனை

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2020      விளையாட்டு
SPORTS-3 2020 01 24

Source: provided

மெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் நடப்பு சாம்பியனான நவோமி ஒசாகாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார் அமெரிக்காவின் இளம் வீராங்கனை கோகோ காப்.

 

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், 3-ம் நிலை வீராங்கனையுமான ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா 15 வயதே ஆன இளம் வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப்-ஐ எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்கியது முதலே கோகோ காப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதை சற்றும் எதிர்பார்க்காத நவோமி ஒசாகா பதிலடி கொடுக்க முயன்றார்.

ஆனால் கோகோ காப் அபாரமாக விளையாடினார். முதல் செட்டை கோகோ காப் 6-3 எனக் கைப்பற்றினார். இதனால் நவோமி ஒசாகா அதிர்ச்சி அடைந்தார். 2-வது செட்டில் சிறப்பாக விளையாடி அதிர்ச்சி கொடுக்க நினைத்தார். ஆனால் 2-வது செட்டிலும் கோகோ காப் சிறப்பாக விளையாடி 6-4 எனக் கைப்பற்றினார். 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகாவை வீழ்த்தி 15 வயதேயான கோகோ காப் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து