முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சண்டையாக மாறிய சம்பிரதாய நிகழ்ச்சி: விஜயதசமி வழிபாட்டில் 40 பேர் மண்டை உடைந்தது

செவ்வாய்க்கிழமை, 27 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருமலை : விஜயதசமி வழிபாட்டில் சம்பிரதாய நிகழ்ச்சி சண்டையாக மாறியது. இதில் 40 பேரின் மண்டை உடைந்தது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவருகட்டா குன்றின் மீது மல்லேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி நாளன்று இக்கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் மற்றும் ஊர்வலம் நடைபெறும். 

அப்போது உற்சவமூர்த்திகளை தங்கள் ஊருக்கு கொண்டு செல்வதற்காக அந்த பகுதியை சேர்ந்த 5 கிராம மக்கள் கையில் கம்புகளை ஏந்தி சம்பிரதாய முறைப்படி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது போல் நடிப்பது வழக்கம்.

ஆனால் இந்த நிகழ்ச்சி காலப்போக்கில் சொந்த பகையை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பாக  மாறியது. கடந்த காலங்களில் தனிப்பட்ட விரோதம் காரணமாக ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட சம்பவங்களும் நடந்தது. எனவே திருவிழாவில் கிராம மக்கள் மது அருந்தியோ, பலமான கம்புகளுடனோ கலந்து கொள்ளக் கூடாது என்று காவல்துறையினர் அறிவுறுத்தினர். ஆனால் கிராம மக்கள் கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நடந்த விழாவிலும் வழக்கம் போல் கிராம மக்கள் கலந்து கொண்டனர். சொந்த பகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒருவர் மீது ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதனால் 40-க்கும் மேற்பட்டோர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. காயமடைந்தவர்களை ஆதோனியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  

ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று அதிகாரிகள் மற்றும் போலீசார் எச்சரிக்கையை மீறி கிராம மக்கள் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு காயம் அடைவது தொடர்கதையாக மாறியுள்ளது. எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு உற்சவங்கள் தடை செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பிரதாய உற்சவம் மட்டும் வழக்கம்போல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து