ஆதர்வாளர்கள் கூறினால் கட்சி தொடங்குவேன் தேர்தலில் தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இல்லை என்று சென்னையில் மு.க. அழகிரி தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி நேற்று சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எதிர்கால அரசியல் திட்டம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து எனது ஆதரவாளர்களுடன் மதுரையில் ஜனவரி 3-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளேன். ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி முடிவு எடுப்பேன். கட்சி தொடங்கும்படி ஆதரவாளர்கள் கூறினால், கட்சி தொடங்குவேன். ரஜினிகாந்த் சென்னை வந்தவுடன் அவரை கண்டிப்பாக நேரில் சந்திப்பேன். பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க ரஜினியை நேரில் சந்திப்பேன் என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அழகிரி, தி.மு.க.வில் இருந்து இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. வரும் தேர்தலில் தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இல்லை என்று கூறினார்.