ஜம்முவில் சர்வதேச எல்லை பகுதியில் 150 மீட்டர் நீள சுரங்க பாதை

சனிக்கிழமை, 23 ஜனவரி 2021      உலகம்
Kashmir 2021 01 23

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கத்துவா நகரில் பன்சார் என்ற இடத்தில் அமைந்த சர்வதேச எல்லை பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் 150 மீட்டர் நீளம் மற்றும் 30 அடி ஆழம் கொண்ட சுரங்க பாதை ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். 

கடந்த 2020-ம் ஆண்டு ஜூனில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஹெக்சாகாப்டர் ஒன்று இதே பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருந்ததும் தெரிய வந்தது. 

கடந்த 2019-ம் ஆண்டு இந்த பகுதி வழியே கும்பல் ஒன்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றது. எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர். 

இந்த சுரங்க பாதையானது சம்பா, ஹிராநகர் மற்றும் கத்துவா பகுதியில் கடந்த 6 மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 4-வது சுரங்க பாதையாகும். இதேபோன்று ஜம்மு நகரில் மொத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 10-வது சுரங்க பாதை ஆகும் என்று எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து