முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்: காரைக்கால் பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

காரைக்கால் : இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என்று காரைக்காலில் நடந்த  பா.ஜ.க பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசினார்.

காரைக்காலில் பா.ஜ.க. தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் சந்தைத் திடலில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது, 

காரைக்கால் அம்மையார் பெண்களின் மேன்மைக்காக குரல் கொடுத்தவர். அவரை வணங்கியும், திருநள்ளாறு சனீஸ்வர பகவானை வணங்கியும் உரையை தொடர்கிறேன். புதுச்சேரி மகாகவி பாரதியார், மகான் அரவிந்தர் வாழ்ந்த புனித பூமி. புதுவையில் நடைபெற்றுள்ள நிகழ்வுகளை கவனித்து வருகிறேன். வரும் தேர்தலில் புதுவையில் பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு அமைவது உறுதி. பிரதமர் நரேந்திர மோடி அரசு 115 திட்டங்களை புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் புதுவை நாராயணசாமி தலைமையிலான அரசு கீழ்த்தரமாக செயல்பட்டு திட்டங்களை தடுக்கும் வேலையை செய்து விட்டது.

வரும் தேர்தலில் ஒருமுறை பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கொடுத்தால் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக புதுவை மாற்றப்படும். காங்கிரஸ் ஆட்சி தானாக கவிழ்ந்து விட்டது. காங்கிரஸில் இருந்தவர்கள் தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டு வருகின்றனர். பொய் கூறுவதையே தமது இயல்பாகக் கொண்ட நாராயணசாமி  தங்களது தலைவர் ராகுல் காந்தியிடமே பொய் கூறியவர். உலகில் பொய் சொல்பவருக்கு விருது கொடுக்க வேண்டுமானால் நாராயணசாமிக்குத்தான் வழங்க வேண்டும். அவரது  எண்ணம், நோக்கம், செயல் அனைத்தும் புதுவை மக்கள் முன்னேற வேண்டும் என இருக்கவில்லை. 

டெல்லியில் காந்தி குடும்பம் மட்டுமே வளர வேண்டும் என நினைத்தார். காங்கிரசிலிருந்து எல்லா தலைவர்களும் பா.ஜ.க.வுக்கு வருவதற்கு அங்கு மகாராஜா போல குடும்ப ஆட்சி நடக்கிறது. புதுவையில் மட்டுமல்ல, இந்தியவிலேயே காங்கிரஸ் காணாமல்போகும். புதுவையின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது. இந்த நிதியின் வளர்ச்சி, திட்டங்கள் வந்து சேர்ந்துள்ளதா? திட்டங்கள் வந்ததா? ரூ.15 ஆயிரம் கோடி மக்களுக்கு திட்டங்களுக்கு வந்து சேரவில்லை என்றால், அது எங்கு சென்றிருக்கும்? காந்தி குடும்பத்துக்கு சென்றிருக்கும். மத்திய அரசு நிதியை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கவில்லை. பட்டியலின மக்களுக்கு ஒதுக்கிய நிதியைக்கூட நாராயணசாமி விட்டு வைக்கவில்லை.

புதுவை எதிலாவது முன்னேறியிருக்கிறதா என பார்த்தால் இல்லை.  படித்த இளைஞர்கள் 75 சதவீதத்தினர் வேலையின்றி உள்ளனர். பா.ஜ.க.வுக்கு கு வாக்களித்தால் இதனை 40 சதவீதமாக குறைப்போம். உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியமானது. புதுவையில் தேர்தல் நடத்தப்பட்டதா? உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் தாமரை வந்துவிடுமோ என நாராயணசாமிக்கு பயம். வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.தான் ஆட்சி அமைக்கும்  நாராயணசாமி எங்கும் தப்பித்துப் போக முடியாது.  நாடு முழுவதும் கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 20 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 50 லட்சம் மீனவர்கள் நலனுக்கு பல கோடி திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

புதுவைக்கு அதிக பலன் வந்து சேர நான் வாக்குறுதி அளிக்கிறேன். மீன்பிடிப் படகு வாங்க ரூ.40 லட்சம் மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் ரூ. 29 லட்சம் கோடி அளவில் மொத்தமாக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் 47 லட்சம் பேர் பயனடையும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. 90 ஆயிரம் குடும்பத்துக்கு மத்திய அரசால் கழிப்பறை புதுவையில் கட்டித்தரப்பட்டுள்ளது.

பெண்களின் நலன் கருதி 5 ஆண்டில் மண்ணெண்ணை இல்லாத மாநிலமாக புதுவையை மாற்றியது பிரதமர் மோடி அரசு.புதுவையில் மட்டும் 24 மருத்துவமனைகள் ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ சேவை வழங்குகிறது. புதுவையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தில் குழாயை திறந்தால் சுத்தமான குடிநீர் கிடைக்க வழி செய்யப்படும்.

புதுவையை மிகச் சிறந்த மாநிலமாக மாற்றுவேன் என பிரதமர் கூறியுள்ளது நடக்கும். உலகின்  உன்னதமான தமிழ்மொழியில் என்னால் பேச முடியவில்லை என்ற ஏக்கம் உள்ளது. அதில் பேசியிருந்தால் இன்னும் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்று அமித்ஷா பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து