முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தான்சானியா அதிபரின் இறுதி சடங்கில் நெரிசல் - 45 பேர் பலி

புதன்கிழமை, 31 மார்ச் 2021      உலகம்
Image Unavailable

தான்சானியா நாட்டில் ஜான் மெகுபுலி 2015-ம் ஆண்டு முதல் அதிபராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் அவர் திடீரென மரணமடைந்தார். தான்சானியா நாட்டு மக்களின் ஆதரவை பெற்ற இவரது மரணம் அந்த நாட்டு மக்களை மிகவும் அதிர்ச்சி அடையவைத்தது.

அவரது உடல் கடந்த வாரம் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஹிக்ரு மைதானத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

ஜான்மெகுபுலியின் உடலை காண்பதற்காகவும், இறுதி அஞ்சலி செலுத்தவும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

பலர் அந்த மைதானத்தின் சுவர் ஏறி குதித்து அங்கு சென்றனர். அப்போது திடீரென சுவர் இடிந்து விழந்தது. இதனால் அங்கு இருந்தவர்கள் சிதறி ஓடினார்கள். இதில் சுவரின் இடிபாடுகளிலும், கூட்ட நெரிசல்களிலும் சிக்கி 45 பேர் உயிர் இழந்தனர். இந்த தகவலை தான்சானியா போலீஸ் துறை தலைவர் லசாரோ மாம் பொசாசா தெரிவித்துள்ளார். மறைந்த அதிபரின் உடலை காண சென்ற பொதுமக்கள் 45 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த நாட்டில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து