முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

400 விக்கெட் மைல்கல்லை பும்ராவால் எட்ட முடியும் : மே.இ.தீவுகள் முன்னாள் வீரர் கணிப்பு

திங்கட்கிழமை, 10 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஜஸ்பிரித் பும்ராவால் 400 விக்கெட் என்ற மைல்கல்லை எட்ட முடியும் என மே.இ.தீவுகள் முன்னாள் வீரர் அம்ப்ரோஸ் கணித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்.... 

மே.இ.தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி அம்ப்ரோஸ் (98 டெஸ்டில் 405 விக்கெட் வீழ்த்தியவர்) யூ டியுப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:

இந்திய அணியில் சில சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவரது பந்து வீச்சை தொடர்ந்து கவனித்து வருகிறேன். மற்ற பவுலர்களைக் காட்டிலும் வித்தியாசமாக பந்து வீசுகிறார். தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.

ஸ்விங் மற்றும் யார்க்கர்...

அவர் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசுவதை பார்க்க ஆவல் கொண்டுள்ளேன். அவரால் டெஸ்டில் 400 விக்கெட்டுகளை (27 வயதான பும்ரா தற்போது 19 டெஸ்டில் ஆடி 83 விக்கெட் எடுத்துள்ளார்) கைப்பற்ற முடியுமா? என்று கேட்கிறீர்கள். பந்தை நல்ல முறையில் ஸ்விங் செய்கிறார். மிரட்டலாக யார்க்கர் பந்துகளை வீசுகிறார். நிறைய பந்துவீச்சு அஸ்திரங்கள் அவரிடம் உள்ளன.

உடல்தகுதியுடன்...

உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட காலம் விளையாடுவதற்கு ஏற்ப உடல்தகுதியுடனும் அவர் இருக்க வேண்டும். அதிக காலம் தொடர்ந்து உடல்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் 400 விக்கெட் மைல்கல்லை அவரால் எட்ட முடியும்.

வலுவான அடித்தளம்... 

அடுத்த மாதம் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இதில் இந்திய அணி சாதிக்க வேண்டும் என்றால் தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் அமைத்து தர வேண்டியது அவசியம். 

இயல்பாக விளையாட... 

ஆரம்பத்திலேயே ஒன்றிரண்டு விக்கெட் சரிந்து விட்டால், அதன் பிறகு விராட் கோலி மற்றும் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். அதேசமயம் நல்ல தொடக்கம் கிடைத்தால் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் நெருக்கடி இன்றி இயல்பாக விளையாட முடியும். அணியும் பெரிய ஸ்கோரை குவிக்கலாம் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து