முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா.வின் மியான்மர் தீர்மானம் : இந்தியா புறக்கணிப்பு

சனிக்கிழமை, 19 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை ராணுவம் அறிவித்தது.

கடந்த பிப்ரவரியில் நடந்த அரசாட்சி கவிழ்ப்பு மற்றும் ராணுவ ஆட்சி அதிகாரம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களை ஒடுக்க ராணுவ வீரர்கள் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பல்வேறு அடக்குமுறைகளையும் மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். 

இந்நிலையில், ஐ.நா.வுக்கான சிறப்பு தூதர் கிறிஸ்டைன் ஸ்கிரானெர் பர்ஜனர் ஐ.நா. பொது சபையில் பேசும் பொழுது, மியான்மரில் வழக்கம்போல் இயல்பு வாழ்க்கை எதுவும் நடைபெறவில்லை. படுகொலைகள் தொடர்கின்றன. கடந்த பிப்ரவரியில் இருந்து போராட்டக்காரர்கள் மற்றும் வழிபோக்கர்கள் என பொதுமக்களில் 900 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அதிகாரம் தக்க வைக்கப்பட வேண்டும் என்பதற்காக ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார். 

இந்த நிலையில், மியான்மரில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக ஐ.நாசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 119 நாடுகள் வாக்களித்தன. பெலாரஸ் மட்டும் எதிராக வாக்களித்தது. மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடுகளான இந்தியா, வங்காளதேசம் மற்றும் பூடான், நேபாளம், சீனா,லாவோஸ், தாய்லாந்து, ரஷியா உள்ளிட்ட 36 நாடுகள் புறக்கணித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து