முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

52 வது சர்வதேச திரைப்பட விழா: கோவாவில் நவம்பர் 20-ல் துவக்கம்

வியாழக்கிழமை, 8 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

டெல்லி: 52 வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நவம்பர் 20-ந் தேதி தொடங்கி 28 ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழா, சுற்றுலா தலமான கோவாவில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி இந்தத் திரைப்பட விழா முடிவடையும்.

ஆனால், உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்க வேண்டிய விழாவை இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில்தான் நடத்த முடிந்தது. இந்த ஆண்டுக்கான 52-ஆவது சர்வதேச திரைப்பட விழா வருகிற நவம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை வழக்கம் போன்று நடைபெறும் என்று இந்திய அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் போட்டி பிரிவில் கலந்து கொள்ள விரும்பும் படங்கள் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 52 ஆவது கொரோனா தொற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெளியிட்டார்.

இந்த விழாவில் பிரபல இயக்குநர் சத்யஜித் ரேக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து சுமார் 180 நாடுகளில் இருந்து 250 படங்கள் வரை இந்த விழாவில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து