முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற முயற்சி: சுற்றுச்சுவர் இடிந்ததில் 30 பேர் கிணற்றில் விழுந்ததால் அதிர்ச்சி

வெள்ளிக்கிழமை, 16 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

போபால் : ம.பி.யில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக மக்கள் திரண்டு வந்ததால் சுவர் இடிந்து 30 பேர் கிணற்றில் விழுந்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு வந்துள்ளனர்.  அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதால், அது இடிந்து விழுந்துள்ளது.

இதனால் கிணற்றை ஒட்டி நின்று கொண்டிருந்த சுமார் 30 பேர் கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்ததும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. கிணற்றில் இருந்து காயமடைந்த நிலையில் பலர் மீட்கப்பட்ட நிலையில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கிணற்றுக்குள் சிக்கியிருக்கும் 15 பேரை மீட்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதே சமயம் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து