புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் விரைவில் உருவாக்கப்படும் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

KN-Nehru 2021 07 21 0

Source: provided

சென்னை: தமிழகத்தில் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் விரைவில் உருவாக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் புதிய குடிநீர் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 

நகர்புறங்களில் சாலை அமைக்கும் போது நிலத்தடி நீர் சேமிப்பு பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஏரி, குளங்களை தூர்வாரும் போது இனி கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட மாட்டாது. சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாக்கடை நீர், நதிகளில் கலக்காமல் தனியாக குழாய்கள் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 

மேலும் ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.2,500 கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் விரைவில் உருவாக்கப்படும். நகராட்சி நிர்வாகப் பணிகளுக்கான டெண்டர்களில் தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து