முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டுப்பாடு தளர்வு எதிரொலி: இங்கிலாந்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 30 ஜூலை 2021      உலகம்
Image Unavailable

இங்கிலாந்தில் நிபுணர்கள் எச்சரிக்கையை மீறி கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து உத்தரவிட்டார். இதனால், பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடையில்லை.  முக கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது ஆகியவற்றில் விலக்கு அளிக்கப்பட்டன.  இதனால் மக்கள் இயல்பு நிலையை நோக்கி திரும்பினர். இதே போன்று, இரவு நேர மதுபான விடுதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் முழுமையான கட்டுப்பாடுகளை தளர்த்துவது எதிர்காலத்தில் தொற்றை அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். அந்நாட்டில் 60 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று சற்று குறைந்து இருந்தது. இதனை தொடர்ந்து அங்கு முழுமையாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இந்த நிலையில் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 31,117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சம் கடந்துள்ளது.  11.83 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதே போல் 85 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனையடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,29,515 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து