மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தேர்தல் ஆணையர் ஆலோசனை

Palanikumar 2021 09 13

Source: provided

சென்னை : அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் நடைபெறாமல் இருந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில், அனைத்து மாவட்டங்களின் கலெக்டர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடனும் தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில், தேர்தலுக்கு முன்பாக தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து