முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிதமானது முதல் தீவிரமான கோவிட் தொற்றுக்கு சிகிச்சை வழிமுறை : லைப்செல்-ன் மெசோசெல்லுக்கு மருத்துவ ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 21 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : இந்தியாவின் முன்னணி ஸ்டெம்செல் வங்கி மற்றும் நோயறிதல் தீர்வுகள் வழங்குவதில் முதன்மை வகிக்கும் லைப்செல், இந்திய மருந்து கட்டுப்பாடு தலைமை இயக்குநரது அலுவலகத்தின் (டிசிஜ ஐ) உயிரியல் பிரிவிலிருந்து மருத்துவ ஆய்வுகளை நடத்துவதற்கான ஒப்புதலை பெற்றிருக்கிறது. 

இது குறித்து லைஃப்செல்-ன் நிர்வாக இயக்குநர், மயூர் அபயா கூறும் போது :- தானமளிக்கப்படுகிற தொப்புள்கொடி திசுக்களிலிருந்து பெறப்படுகிற இடைநுழைத் திசுச்செல்களிலிருந்து எடுக்கப்படும் மெசோசெல், உயிருக்கு ஆபத்தான கோவிட் 19 நிமோனியா மற்றும் தீவிர சுவாச சிரமத்தால் அவதியுறும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இப்போது தயார் நிலையில் உள்ளது. இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ள இந்த மருத்துவ ஆய்வுச்சோதனை, மிதமானதிலிருந்து தீவிரமானது வரையிலான கோவிட் 19 தொற்று பாதிப்புள்ள நோயாளிகளுக்கான சிகிச்சைக்கு மெசோசெல்-ன் பாதுகாப்பு மற்றும் பயனளிக்கும் திறனை மதிப்பீடு செய்யும். 

கடந்த ஆண்டு காலகட்டத்தில் குறைவான மற்றும் நம்பகமான கோவிட் 19 ஆர்டிபிசிஆர் பரிசோதனையின் வழியாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களுக்கு லைஃப்செல் ஆதரவை வழங்கியிருக்கிறது. அழற்சிக்கு எதிரான, நோயெதிர்ப்புத்திறனை உயர்த்துகிற, திசுக்களை மறுஉருவாக்கம் செய்கிற பண்பியல்புகளைக் கொண்டிருக்கும் எம் எஸ்சிகளை திறம்பட பயன்படுத்துகிற இந்த புதிய செல் சிகிச்சை முறையானது கோவிட் 19-க்கு எதிரான நமது யுத்தத்தை மேலும் வலுவாக்கும் மற்றும் நமது பிரதான நோக்கமான உயிர்களை காப்பாற்ற உதவும்.

கோவிட் 19-க்கான சிகிச்சைக்கு மட்டுமன்றி தொடர்புடைய பிற சிக்கல்களுக்கும் தீர்வுகாண இதைப்போன்ற பிற சிகிச்சைமுறைகள் பிற நாடுகளில் இரண்டாவது கட்ட மருத்துவ ஆய்வு பரிசோதனைகள் என்ற அளவுக்கு ஏற்கனவே முன்னேற்றம் கண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது; தீவிர கோவிட் 19 தொற்று சிக்கல்களால் அவதியுறும் இந்த புதிய சிகிச்சைமுறை மிகப்பெரிய நம்பிக்கையை நிச்சயமாக வழங்கும் என்று நம்பப்படுகிறது,” என்று லைஃப்செல்-ன் நிர்வாக இயக்குநர், மயூர் அபயா கூறினார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து