முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

90 வயதில் கார் ஓட்டிய மூதாட்டி: பாராட்டிய ம.பி. முதல்வர்

சனிக்கிழமை, 25 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

போபால் : மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் 90 வயதான மூதாட்டி ஒருவர் கார் ஓட்டி பழகும் வீடியோ வெளியாகி உள்ளது. பிலாவாலி நகரத்தைச் சேர்ந்த ரேஷாம் பாய் என்ற மூதாட்டி கார் ஓட்ட கற்றுக் கொண்டார். தனக்கு வாகனங்களை இயக்குவது மிகவும் பிடிக்கும் என கூறிய அவர், தனது குடும்பத்தில் அனைவருக்கும் கார் ஓட்ட தெரியும் எனவும் தனக்கு மட்டும் தெரியாததால் அதனை கற்றுக் கொண்டேன் எனவும் தெரிவித்தார்.

கார்கள் மட்டுமல்ல டிராக்டர்களையும் ஓட்டுவேன் என்றும் அந்த மூதாட்டி கூறியுள்ளார்.

வயதான காலத்திலும் கார் ஓட்ட கற்று கொண்ட மூதாட்டிக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஆசைகளை நிறைவேற்ற வயது வரம்பு இல்லை என்பதை மூதாட்டி உணர்த்தியுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து