முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த மாதத்தில் இது 3-ம் முறை: ஏவுகணை சோதனை செய்தது வடகொரியா

செவ்வாய்க்கிழமை, 28 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பியாங்யாங் : குறைந்த தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை ஒன்றை அதன் கிழக்கு கடலோரப் பகுதியில் வட கொரியா நேற்று ஏவியுள்ளது என்று தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சோதனையால் எங்கள் படையினருக்கு எந்த பாதிப்பு இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தற்காத்துக் கொள்வதற்கான மற்றும் ஆயுதங்களை சோதனை செய்வதற்கான வடகொரியாவின் உரிமையை யாராலும் தடுக்க முடியாது என்று வடகொரியாவின் தூதர் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் தெரிவித்துள்ள சூழ்நிலையில் இந்த ஆயுத சோதனை நடந்துள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மாற்று க்ரூஸ் ஏவுகணை ஆகியவற்றை வட கொரிய அரசு சோதனை செய்திருந்தது. சில நாட்களுக்கு முன்பு தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாங்கள் விரும்புவதாகவும் வடகொரியா அரசு தரப்பில் சென்ற வாரம் கூறப்பட்டிருந்தது.

இந்த ஏவுகணை சோதனை நடந்துள்ளது தங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ள அமெரிக்க ராணுவம், அமெரிக்கப் படையினருக்கோ அதன் கூட்டாளி நாடுகளைச் சேர்ந்த சேர்ந்தவர்களுக்கோ வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து