முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.கவிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வான புதிய எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 28 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

மாநிலங்களவை இடைத்தேர்தலில் தேர்வான மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், சர்பனந்த சோனவால் மற்றும் புதுவை செல்வகணபதிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றபோது மாநிலங்களவை உறுப்பினர் அல்லாத எல்.முருகன், சர்பனந்த சோனவால் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கப்பட்டது. மாநிலங்களவை இடைத்தேர்தலில் அசாமில் சர்பனந்த சோனவால் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் எல்.முருகன் ஆகியோர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், இருவரும் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

 

மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வாகியுள்ள எனது அமைச்சரவை நண்பர்களான எல்.முருகன் மற்றும் சர்பனந்த சோனவால் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்தார். அதேபோல், புதுவையிலிருந்து போட்டியின்றி தேர்வான பா.ஜ.க மாநில பொருளாளர் செல்வகணபதிக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து