முக்கிய செய்திகள்

தங்கம் விலை மீண்டும் உயர்வு

சனிக்கிழமை, 9 அக்டோபர் 2021      வர்த்தகம்
Gold 2021 07 01

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,504-க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் ஆபரணத் தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் நேற்று மீண்டும் உயர்ந்தது.

அதன்படி, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.4,438-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 504-க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.69.90-க்கும், 10 கிலோ வெள்ளியின் விலை ரூ.700 உயர்ந்து ரூ.65 ஆயிரத்து 900-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து