முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெளதம் மேனன் பாராட்டிய இறுதிப் பக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 7 நவம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

திரையுலகில் ஒரு புதிய கதை சொல்லல் முறையில் உருவாகியிருக்கிறது 'இறுதிப் பக்கம் 'என்ற திரைப்படம். ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் மனோ வெ. கண்ணதாசன். படம் பற்றி அவர் கூறுகையில், இப்படத்தின் முக்கிய கட்டத்தில் ஒரு கொலை நடக்கும். அந்தக் கொலையைச் செய்தது யார் என்பது பற்றிய வெவ்வேறு கருத்துக்கள் நிலவும்.

ஆனால் யாராலும் கொலையாளியை யூகிக்க முடியாது. அப்படி ஒரு படமாக இந்த 'இறுதிப் பக்கம்  படம் இருக்கும் என்கிறார் இயக்குனர் மனோ வெ. கண்ணதாசன். நான் யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாததால் அனுபம் மிக்கவர்களைப் படக் குழுவாக்கி பலமான கூட்டணியாக அமைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன் என்றார்.

சமீபத்தில் வெளியான இப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துப் பாராட்டிய இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். படத்தை ஆக்சன் ரியாக்சன் பிலிம்ஸ் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து