முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பால்டிக் கடல் பகுதியில் அணு ஆயுத தாக்குதல் பயிற்சி நடத்திய ரஷ்யா

வியாழக்கிழமை, 5 மே 2022      உலகம்
Nuclear-weapons-attack-2022

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் 70 நாட்களுக்கும் கூடுதலாக நீடித்து வருகிறது.  இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர்களாக உள்ள போலந்து மற்றும் லித்துவேனியா ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்த பால்டிக் கடல் பகுதியில், அணு ஆற்றலை கொண்ட கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய ஸ்கேண்டர் வரை ஏவுகணைகளை அனுப்பி பயிற்சி மேற்கொள்வதில் ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக விமான தளங்கள், பாதுகாக்கப்பட்ட உட்கட்டமைப்புகள், ராணுவ சாதனம் மற்றும் முகாம்கள் ஆகியவற்றை போலியாக உருவாக்கி, அவற்றை இலக்குகளாக கொண்டு ஒன்று முதல் பல்வேறு முறை மின்னணு முறையிலான தாக்குதல்களை தொடுத்து பயிற்சி மேற்கொண்டனர். இந்த பயிற்சியில், ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்திய பின்னர் தங்களது இருப்பிடங்களை மாற்றி கொண்டனர்.  எதிரிகளின் பதிலடியில் இருந்து தப்பிப்பதற்காக இந்த முறையை அவர்கள் கையாண்டுள்ளனர்.  இதே போன்று கதிரியக்கம் மற்றும் ரசாயன வீச்சு ஆகிய தாக்குதல்களுக்கும் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.  இதில் 100-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டனர்.

சமீப நாட்களாக அணு ஆயுத கிடங்குகளை திறக்க வேண்டும் என்று ரஷ்ய தொலைக்காட்சி சேனல்களில் கூறப்பட்டு வரும் செய்திகளை நாங்கள் கேட்கிறோம் என ரஷ்ய செய்தி நிறுவன ஆசிரியர் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற டிமிட்ரி முரடோவ் கூறியுள்ளார்.  இதனால், ரஷ்யா தனது போரின் ஒரு பகுதியாக அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான சாத்தியம் பற்றி உலக நாடுகளிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது.  ஒரு வேளை அணு ஆயுதங்களை பயன்படுத்தி போர் நடத்தப்பட்டால் அதனால், மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் சூழல் ஏற்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து