முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 கோடி பார்வைகளை கடந்தது: யூடியூப்பில் புதிய சாதனை படைத்த பீஸ்ட் பட 'அரபிக் குத்து’ பாடல்

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2022      சினிமா
YouTube 2022 07 29

Source: provided

சென்னை : இயக்குநர் நெல்சன் இயக்கத்தில்  விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ’அரபிக் குத்து' பாடல் யூடியூப்பில் 20 கோடி பார்வைகளை கடந்து புதிய சாதனையைப் பெற்றுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.  இதனால் இயக்குநர் நெல்சன் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பீஸ்ட் படம் ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும், அனிருத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய வெற்றியைப் பெற்றன.

குறிப்பாக அரபிக் குத்து வெளியாகி இந்திய அளவில் பிரபலமானது. இந்திய அளவில் பிரபலங்கள் பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி விடியோ பகிர்ந்தனர். சில கிரிக்கெட் வீரர்களும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய விடியோக்களும் வைரலாகின. 

அரபிக்குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் இணைந்து பாடினர். ரௌடி பேபி, புட்ட பொம்மா பாடல்களுக்கு நடனம் அமைந்த ஜானி இந்த பாடலுக்கும் நடனம் அமைத்திருந்தார். இந்த நிலையில் ’அரபிக்குத்து’ விடியோ பாடல் யூடியூப்பில் 200 மில்லியன் (20 கோடி) பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!