முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ பட்டம் வென்றார் ஆர்யா

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      உலகம்
Arya 2022-08-07

Source: provided

வாஷிங்டன் : 2022-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ அழகி பட்டத்தை இந்திய அமெரிக்க இளம்பெண்ணான ஆர்யா வால்வேகர் (18) கைப்பற்றி அசத்தினார்.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ, மிஸஸ் இந்தியா யு.எஸ்.ஏ மற்றும் மிஸ் டீன் இந்தியா யு.எஸ்.ஏ ஆகிய மூன்று பிரிவுகளாக நடைபெற்ற 30 மாநிலங்களைச் சேர்ந்த 74 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்தாண்டு மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ அழகி போட்டி 40-வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இது இந்தியாவுக்கு வெளியே நீண்ட காலமாக நடைபெறும் இந்திய அழகி போட்டியாகும். இதில் வர்ஜீனியாவைச் சேர்ந்த இந்திய அமெரிக்க பெண்ணான ஆர்யா வால்வேகர், மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ. 2022 என்ற பட்டத்தை வென்றார்.

அழகி போட்டியில் வென்ற 18 வயதான ஆர்யா கூறுகையில், என்னை வெள்ளித்திரையில் பார்ப்பதும், திரைப்படங்கள் மற்றும் டி.வி.யில் வேலை பார்ப்பதும் எனது சிறுவயது கனவாக இருந்தது. புதிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்வது, சமைப்பது மற்றும் விவாதிப்பது ஆகியவை பொழுதுப்போக்கு ஆகும் என்று கூறினார்.

வர்ஜீனியா பல்கலைக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவி சௌமியா ஷர்மா 2-வது இடத்தையும், நியூ ஜெர்சியைச் சேர்ந்த சஞ்சனா செகுரி 3-வது இடத்தையும் பெற்றனர். இது நியூயார்க்கை தளமாகக் கொண்ட இந்திய-அமெரிக்கர்கள் தர்மாத்மா மற்றும் நீலம் சரண் ஆகியோரால் உலகளாவிய போட்டிகளின் பதாகையின் கீழ் துவங்கப்பட்டது. 

வாஷிங்டனை சேர்ந்த அக்ஷி ஜெயின் மிஸஸ் இந்தியா யு.எஸ்.ஏ. பட்டத்தையும், நியூயார்க்கைச் சேர்ந்த தன்வி குரோவர் மிஸ் டீன் இந்தியா யு.எஸ்.ஏ. பட்டத்தை வென்றனர். மூன்று பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்கள், அடுத்த ஆண்டு துவக்கத்தில் இதே அமைப்பு மும்பையில் நடத்தும் உலகளாவிய அழகி போட்டியில் பங்கேற்க செல்வதற்கான டிக்கெட்டுகளை பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து