முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் தகுதி தேர்வு தேதி திடீர் மாற்றம்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      தமிழகம்
TNBSC 2022-07-06

Source: provided

சென்னை : ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தாள் ஒன்றுக்கான தேர்வு செப்டம்பர் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் வரும் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டிருந்தது. இந்த தேர்வு எழுதுவதற்காக 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. 

இந்த நிலையில் நிர்வாகக் காரணங்களினால் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, தாள் ஒன்றுக்கான தேர்வு செப்டம்பர் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பு, தேர்வுக்கால அட்டவணை, அனுமதிச்சீட்டு விபரம் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து