முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

13 மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை: தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் டெல்லியில் அமித்ஷா ஆலோசனை

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      இந்தியா
Amitsa 2022-09-22

Source: provided

புதுடெல்லி: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் நேற்று அதிகாலை 3.30 மணிமுதல் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 13 மாநிலங்களில் நடந்த இந்த சோதனை குறித்து டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாடு புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், மராட்டியம், ராஜஸ்தான், டெல்லி, அசாம் உள்பட பல்வேறு மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டது. பெரும்பாலான இடங்களில் சில மணிநேரத்தில் சோதனை நிறைவுபெற்றது.

இந்த சோதனையின் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 106 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கேரளாவில் அதிகபட்சமாக 22 பேர் கைதாகி இருக்கிறார்கள். கர்நாடகா, மராட்டியம் மாநிலங்களில் தலா 20 பேர் கைதாகி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அசாமில் 9 பேர், உத்தரபிரதேசத்தில் 8 பேர், ஆந்திராவில் 5 பேர், மத்திய பிரதேசத்தில் 4 பேர், புதுச்சேரி, டெல்லியில் தலா 3 பேர், ராஜஸ்தானில் 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கைதான 106 பேரும் டெல்லிக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அறையில் இந்த ஆலோசனை நடந்தது. இதில் உள்துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து